Monday, July 14, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தலுக்கு தயாராகுங்கள் - கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை

தேர்தலுக்கு தயாராகுங்கள் – கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை

தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு ஜனாதிபதியுடன் ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதையடுத்து அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி இந்த சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்டர்கள் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இருந்து பிரசாரம் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மற்றும் முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்தக் கலந்துரையாளலில் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னர் அறிவித்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles