கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்லங்கல பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அங்கு, சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சட்டவிரோதமாக நடப்பட்ட சுமார் 08 அடி உயரமுள்ள சுமார் 15,000 கஞ்சா மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மித்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் 38 மற்றும் 63 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்த கைத்தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.