Tuesday, July 15, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஏ.டி.எம் கொள்ளை: சாரதியுடன் வேன் மீட்பு

ஏ.டி.எம் கொள்ளை: சாரதியுடன் வேன் மீட்பு

கம்பளை தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை கொள்ளையடிப்பதற்காக சந்தேகநபர்கள் வருகைதந்த வேன் இன்று காலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பேராதனையில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த வாகனம் மீட்கப்பட்டுள்ளது.

அதன் சாரதி, குறித்த வேனுக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஏ.டி.எம் இயந்திரத்தை நான்கு சந்தேக நபர்கள் முற்றாக அகற்றிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 12.40 அளவில் இடம்பெற்றுள்ளது.

தங்கள் அடையாளத்தை மறைக்க முகமூடி அணிந்த நான்கு நபர்கள் ஒரு சிற்றூர்தியில் வந்து ஏ.டி.எம் இயந்திரத்தை அகற்றிச்சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துக்கு முன்னதாக, குறித்த சந்தேகநபர்கள் வங்கியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிவைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்த பணத்தொகை தொடர்பான தகவல்கள் தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles