இஸ்ரேலின் தென் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பீர்ஷெபா (Beersheba) நகரில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றின் வௌிப்புறத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது மூவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் தாக்குதல்தாரியால் வாகனத்தால் மோதி கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
தாக்குதல்தாரி பஸ் சாரதியொருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஐளு குழுவினருக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் குறித்த தாக்குதல்தாரி இதற்கு முன்னர் சிறை வைக்கப்பட்டிருந்ததாக இஸ்ரேலிய உட்துறை பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.