Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீண்டும் எரிபொருள், எரிவாயு வரிசை ஏற்படாது - நிதி இராஜாங்க அமைச்சர்

மீண்டும் எரிபொருள், எரிவாயு வரிசை ஏற்படாது – நிதி இராஜாங்க அமைச்சர்

நாட்டில் தற்போது பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு ஒதுக்கம் 400 மில்லியன் டொலர்கள் மட்டுமே உள்ளது.

ஆனாலும் கடந்த ஆண்டு மார்ச் / ஏப்ரல் மாதங்களில் நிலவியதைப் போல மீண்டும் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான வரிசை ஏற்படாது என்று, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயு போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலையும், அதனால் மீண்டும் அவற்றுக்கான நீள் வரிசைகளும் உருவாகுமா? என, கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய அவர், பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு ஒதுக்கம் குறைவாக இருந்தாலும், அதனை அதிகரித்துக் கொள்ள பல்வேறு முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு இறக்குமதிகளுக்கு நிதித்தட்டுப்பாடு இருந்தாலும், முன்னரைப் போன்ற மோசமான நிலை மீண்டும் உருவாகாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#The Morning

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles