வெளிநாடுகளில் திருமணம் செய்து கொண்டவர்களின் திருமணப் பதிவுகளை உள்நாட்டில் அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்று நீதி அமைச்சர் அலி சப்ரியினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி வெளிநாடுகளில் செய்துக் கொள்ளப்பட்ட திருமணப் பதிவுகள், விவாகரத்து மற்றும் சட்டரீதியான பிரிவு போன்றவற்றை இலங்கையில் அங்கீகரிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
இதற்கான சட்டவாக்க நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.