Monday, November 18, 2024
28.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமைச்சர் டக்ளஸ் கொலை முயற்சி: பெண்ணுக்கு மரண தண்டனை

அமைச்சர் டக்ளஸ் கொலை முயற்சி: பெண்ணுக்கு மரண தண்டனை

கொள்ளுப்பிட்டியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தி 2 பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட நால்வரை கொலை செய்வதற்கு ஜெயராணி என்ற குண்டுதாரிக்கு உடந்தையாக செயற்பட்டமை தொடர்பில் செல்வகுமாரி சத்தியலீலா என்பவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.

இந்த மரண தண்டனை நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை படுகொலை செய்யும் நோக்கில் 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் 07ஆம் திகதி,கொள்ளுப்பிட்டி பகுதியிலிருந்த அவரது அலுவலகத்திற்குள் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த குண்டுத் தாக்குதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்திருந்தனர்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட செல்வகுமாரி சத்தியலீலாவிற்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனையை ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்த தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles