ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இந்த ஆண்டுக்கான தேர்தல் வேட்புமனுவை போலி கையொப்பத்தைப் பயன்படுத்தி சமர்ப்பித்துள்ளதாக செய்தியொன்று வெளியாகியுள்ளது.
தெஹிவளை மவுண்ட் மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தயாசிறியின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி வேட்புமனுவை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, இன்று (24) குற்றப் புலனாய்வுப் பிரிவில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
#Mawrata