Sunday, May 31, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் மீண்டும் வழமைக்கு

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் மீண்டும் வழமைக்கு

களனிதிஸ்ஸ அனல்மின் உற்பத்தி நிலைய நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 08.00 மணியளவில் மீண்டும் அனல்மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

போதியளவு நப்தா இல்லாததால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் தற்போதுள்ள நெப்தாவைக் கொண்டு மீள் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது இன்னும் ஒன்றரை நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு மின்சார சபையினால் பணம் செலுத்தப்படாமையால் நெப்தா வழங்க மறுத்தமையே இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles