Monday, November 18, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலவச டீசலை விநியோகிக்க 122 மில்லியன் ரூபா செலவாம்

இலவச டீசலை விநியோகிக்க 122 மில்லியன் ரூபா செலவாம்

சீனாவினால் இலவசமாக வழங்கப்பட்ட டீசலை விநியோகிக்க 122 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நெல் அறுவடைக்காக சீனாவினால் வழங்கப்பட்ட 6.8 மில்லியன் லீற்றர் டீசலை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் பணியை கமநல அபிவிருத்தி திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டீசல் விநியோகத்தை மேற்கொள்வதாகவும், அதற்காக 122 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரை ஏக்கர் முதல் இரண்டரை ஏக்கர் வரை பயிர் செய்யும் நெல் விவசாயிகளுக்கு டீசல் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles