வெள்ளை முட்டையை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டையை 46 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியாக்கப்பட்டுள்ளது.
இந்த விலையை மீறி அதிக விலைக்கு விற்பனை செய்கின்ற வர்த்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுவர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
அதிக விலையில் முட்டைகளை விற்பனை செய்கின்ற வியாபாரிகளுக்கு 100,000 ரூபா முதல் 500,000 ரூபா வரையிலும், கம்பனிகளாக பதிவு செய்யப்பட்டிருந்தால் 1 மில்லியன் ரூபா முதல் 5 மில்லியன் ரூபா வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.