ஐரோப்பா முழுவதும் ஆட்கடத்தல்களை மேற்கொண்ட குற்றத்துக்காக 14 இலங்கைப் பிரஜைகளுக்கு வடக்கு பிரான்சில் உள்ள நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது
செரிஃபோன்டைன் கிராமத்தில் உள்ள மளிகைக் கடையில் இருந்து கொண்டு, ஆட்கடத்தல் நடவடிக்கையை வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பிரதான சந்தேகநபருக்கு ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து உக்ரைன் ஊடாக, இலங்கை மற்றும் பங்களாதேஷில் இருந்து அகதிகளை கடத்த கட்டணங்களையும், பாதையையும் குறித்த நபரே தீர்மானித்து வந்துள்ளார்.
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மற்றொரு சந்தேகநபருக்கு (நாடு கடத்தல் கோரிக்கைகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்) ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஏனையவர்களுக்கு குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.