தேர்தலை ஒத்திவைப்பதற்காக அல்ல, தேர்தலை நடத்துவதற்காகவே தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இந்த உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் கம்பஹா மாவட்டத்திற்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வில் இன்று (20) கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை 19 ஆகும். இதற்கான வேட்புமனுக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கம்பஹா மாவட்ட காரியாலயத்தில் கையளிக்கப்பட்டன.
#Lankadeepa