குறைந்த வசதிகளுடன் வாழ்கின்ற வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு, உறுதிப்பத்திர வாடகை வீட்டுத்திட்ட முறையொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
குறித்த கருத்திட்டத்தின் கீழ் 04 மாடிகளுடன் கூடிய அடுக்குமாடிக் குடியிருப்புக்களை நிர்மாணிப்பதற்கும், முதலாம் கட்டத்தின் கீழ் மாகாண மட்டத்தில் 464 வீடுகளுடன் கூடிய 09 வீடமைப்புத் தொகுதியை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
தெரிவுசெய்யப்படும் பயனாளிகளுக்கு ஆரம்பக் கொடுப்பனவை செலுத்துவதற்கான இயலுமை இன்மையால், மாதாந்தம் 15,000 ரூபா வாடகைப் பணமாக 31 வருடங்களுக்கு அறவிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், இரண்டாவது அல்லது மூன்றாவது தலைமுறைக்கு வீட்டு உரிமையை ஒப்படைக்கக் கூடிய வகையிலும், எந்தவொரு காரணத்திற்காகவும் வீட்டை விற்பனை செய்வதற்கு இயலாத வகையிலும் பயனாளிகளுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.