Tuesday, August 26, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹரக் கட்டாவின் சட்டபூர்வமற்ற மனைவி ஹெரோயினுடன் கைது

ஹரக் கட்டாவின் சட்டபூர்வமற்ற மனைவி ஹெரோயினுடன் கைது

துபாயில் கைதான பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஹரக் கட்டாவின் சட்டபூர்வமற்ற மனைவியென கூறப்படும் டீனா எனப்படும் திலினி நிஷாதி என்ற பெண் ஹெரோயினுடன் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (18) மஹரகம உடஹேன வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர் 12 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பெண்ணின் கணவர், புலா எனப்படும் தினேஷ் மதுசங்க, தற்போது விளக்கமறியலில் உள்ளார்.

மேலும் இந்த பெண், கொலை செய்யப்பட்ட எம்.டபிள்யூ. மதுர லக்ஷிதா என்ற ‘மிதிகம ஹிச்சி மல்லி’ என்பவருடன் திருமணத்துக்கு அப்பாலான தொடர்பினை பேணிவந்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles