வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் விதிகளை உள்ளடக்கிய தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் 61 மேலதிக வாக்குகளால் முக்கிய திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்துக்கு ஆதரவாக 97 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் கிடைத்தன.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
இந்த சட்டமூலத்தின் ஊடாக உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மேலும் காலம்தாழ்த்த அரசாங்கம் திட்டமிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.