Friday, August 22, 2025
30 C
Colombo
செய்திகள்உலகம்12.7 மில்லியன் டொலர்களை இழந்தார் உசைன் போல்ட்

12.7 மில்லியன் டொலர்களை இழந்தார் உசைன் போல்ட்

‘உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்‘ என அழைக்கப்படும் உசைன் போல்டிடம் பங்குச்சந்தை முதலீட்டு நிறுவனமொன்று 12.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப்பதக்கங்கள் வென்றுள்ள உசைன் போல்ட், தான் ஈட்டிய வருமானத்தின் பெரும்பகுதியை ஜமைக்காவிலுள்ள முதலீட்டு நிறுவனமொன்றில் 10 ஆண்டுகளாக முதலீடு செய்துவந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த முதலீட்டு கணக்கிலிருந்து திடீரென12.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமானதாகவும், தற்போது வெறும் 12,000 அமெரிக்க டெலர்களே எஞ்சியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரே பணத்தை கையாடல் செய்துள்ளார் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உசைன் போல்டின் வாழ்நாள் சேமிப்பு முழுவதும் மாயமானதால் அதனை மீட்க பொலிஸார் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles