Wednesday, April 30, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவிடமிருந்து உதவித் தொகையை பெற தீர்மானம்

இந்தியாவிடமிருந்து உதவித் தொகையை பெற தீர்மானம்

இலங்கையில் சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு நிலையத்தை நிறுவுவதற்கு, இந்திய அரசாங்கத்திடம் இருந்து உதவித் தொகையினை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

குறித்த ஒருங்கிணைப்பு நிலையத்தை நிறுவுவதற்கு 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, அதனை நிறுவுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கும், இந்தியாவின் பாரத் இலக்ரோனிக்ஸ் நிறுவனத்திற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles