தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் ஹஷிம் அம்லா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சர்வதேச ஓய்வுக்குப் பிறகு சர்ரே அணிக்காக அவர் விளையாடி வந்தார்.
ஏற்கனவே 2013 மற்றும் 2014 இல் சர்ரே அணிக்காக விளையாடிய அவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, 2019 இல் கோல்பாக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
கிரிக்கெட்டில் அவரது இறுதி போட்டி கடந்த ஆண்டு கவுண்டி சாம்பியன்ஷிப்பில் லங்காஷயர் அணிக்கு எதிரான ஆட்டமாகும்.
அந்த சீசனில் அவர் சராசரியாக 40 க்கு 700 ரன்களை குவித்தார்.
வலது கை ஆட்டக்காரரான அவர், தனது சர்வதேச போட்டிகளில் 55 சதங்கள் உட்பட 18000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.