Saturday, February 14, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவனை முத்தமிட்ட அதிபர்

மாணவனை முத்தமிட்ட அதிபர்

கேகாலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவனை அதிபர் முத்தமிட்டதாக மாணவனின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்ததாக கூறப்படும் மாணவனிடம் வாக்குமூலம் பெறப்பட்டதுடன் அதிபரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ப மாணவன் சிகரெட் புகைத்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிகரெட் வாசனை வருகிறதா என்பதை கண்டறியவே தான் அவ்வாறு செய்ததாக அதிபர் தெரிவித்துள்ளார் .

மேலும் மாணவன் புகைபிடிக்கவில்லை என சோதனையில் தெரியவந்ததாக அதிபர் பொலிஸாரிடம் கூறியதாக தெரியவருகிறது.

இதனை தாம் வேறு எந்த நோக்கத்திற்காகவும் செய்யவில்லை எனவும் அதிபர் பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles