இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவர் ஜே. ஸ்ரீ ரங்கா உட்பட புதிய நிர்வாக குழாமுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (18) இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவு நாளை வரை அமுலில் இருக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்கால தடையுத்தரவை வழங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மறுத்திருந்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனக்கு தலைவர் பதவிக்கு வாய்ப்பு வழங்காமல் பாரிய அநீதி இழைத்ததாக நேற்று பிற்பகல் ஜஸ்வர் உமர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.