வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக செலுத்திய சந்தேக நபரை, அணுகி வேகத்தை குறைக்குமாறு சாரதி கூறியமையே இந்த கொலைக்கான காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும், அதற்காக பல விசேட காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கெஸ்பேவ காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.