ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கு 10 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (17) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அதிகாரியினால் தவறு நடந்தால் அதற்கு ஜனாதிபதியும் பொறுப்பு என குறிப்பிடப்பட்டுள்ளதால் அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இவ்வளவு பெரிய தொகை இழப்பீடாக வழங்க தன்னிடம் போதிய பணம் இல்லை என தெரிவித்த அவர், நாடு முழுவதிலும் உள்ள நண்பர்கள் மற்றும் செல்வந்தர்களிடமிருந்து உதவி கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.