இரத்தினபுரி – பெல்மடுல்ல பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல் கொத்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகளுக்கு இந்த இரத்தினக்கல் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட போதிலும் அது விற்பனை செய்யப்படவில்லை என இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான விராஜ் டி சில்வா தெரிவித்துள்ளார்.
சுமார் 510 கிலோ எடையுள்ள இந்த இரத்தினக் கொத்து 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (2,000 கோடி ரூபாவிற்கும்) அதிகமான பெறுமதியானது என முன்னதாக, இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்திருந்தது.