மிகை வரி சட்டமூலம் அரசியலமைப்புடன் இசைந்து செல்கிறது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதற்கமைய நாடாளுமன்றில் சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற முடியுமென சபாநாயகரிடம் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இன்று (22) காலை நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை சபையில் தெரிவித்தார்.