அனைத்து நினைவுக் குறிப்புகளையும் கொண்ட இளவரசர் ஹேரியின் சர்ச்சைக்குரிய புத்தகமான ஸ்பெயார், உலகில் வேகமாக விற்பனையாகும் புனைகதை அல்லாத புத்தகமாக கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
பிரித்தானியாஇ அமெரிக்கா மற்றும் கனடாவில் வெளியான முதல் நாளில் 1.43 மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளவரசர் ஹேரியின் போதைப்பொருள் பயன்பாடு, அவரது சகோதரர் இளவரசர் வில்லியம் உடனான மோதல் மற்றும் பலவற்றை விவரிக்கும் ஸ்பெயார் என்ற புத்தகம் ஜனவரி 10 அன்று வெளியிடப்பட்டது.
அத்துடன், அது 16 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
2020 இல் வெளியிடப்பட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நான்காவது புத்தகமான எ பிராமிஸ் லேண்ட் இந்த சாதனையை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.