Friday, April 10, 2026
26.7 C
Colombo
செய்திகள்விளையாட்டுதோல்விக்கான காரணத்தை விளக்கப்படுத்துமாறு அறிவிப்பு

தோல்விக்கான காரணத்தை விளக்கப்படுத்துமாறு அறிவிப்பு

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட கடும் தோல்வி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை அணியின் முகாமையாளருக்கு இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர், தலைமை பயிற்றுவிப்பாளர், தெரிவுக்குழு மற்றும் முகாமையாளர் ஆகியோரின் கருத்துக்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை 5 நாட்களுக்குள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

நேற்று (15) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 317 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

ஒருநாள் போட்டியில் ஒரு அணி பெற்ற மிகப்பெரிய தோல்வி இதுவாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles