Wednesday, July 23, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஓமானிலிருந்து 15 பெண்கள் நாடு திரும்பினர்

ஓமானிலிருந்து 15 பெண்கள் நாடு திரும்பினர்

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 15 பெண்கள் நேற்று (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL 206 விமானத்தின் மூலம் இவர்கள் நேற்று அதிகாலை 5.00 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்நிலையில், ஓமானில் உள்ள பாதுகாப்பு மையத்தில் தற்போது 117 இலங்கைப் பெண்கள் உள்ள நிலையில், அவர்களில் 17 பேரை இலங்கைக்கு அனுப்புவதற்காக ஓமானின் மஸ்கட் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களில் இருவரின் ஆவணங்களில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக மஸ்கட் விமான நிலையத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் ஏனைய 15 பேரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles