அரச மருத்துவமனைகளில் பற்சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக அரச பற்சிகிச்சை நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பல் நிரப்புதல், பல் பாதுகாப்பு உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக சங்கத்தின் செயலாளர் வைத்திய நிபுணர் மஞ்சுளா ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்போர் பட்டியலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மருந்து தட்டுப்பாடு காரணமாக அரச மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆனபோதும் அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.