Friday, February 13, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிலியந்தலையில் யுவதி ஒருவர் கடத்தல்

பிலியந்தலையில் யுவதி ஒருவர் கடத்தல்

பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலென்வத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் இளம் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (15) பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடத்தலை மேற்கொண்ட சந்தேகநபர் மதவாச்சி பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான கடற்படை சிப்பாய் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடத்தப்பட்ட யுவதியுடன் சந்தேகநபர் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும், பின்னர் அதனை 6 மாதங்களுக்கு முன்னர் நிறுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடத்தப்பட்ட யுவதிக்கு சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், கடத்தல் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles