மத்திய நேபாளத்தில் உள்ள பொக்காரா விமான நிலையத்தில் 72 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
இதில் குறைந்தது 68 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
எட்டி ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் இருந்து சென்று பொக்ராவில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி, தீப்பிடித்தது.
விமானத்தில் 10 வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் நான்கு பணியாளர்கள் உட்பட 72 பயணிகள் இருந்ததாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.