அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரத்தில் இன்று (13) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அவர்கள், புற்று நோய்க்கான மருந்துகளில் பெரும்பாலானவை வைத்தியசாலைகளில் கிடைப்பதில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் அஜந்த ராஜகருணா,
‘பெரசிட்டமோல் சிரப், சல்புடமோல் மாத்திரைகள் முதல் அறுவை சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் வரை பெரும் தட்டுப்பாடு உள்ளது. புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் 22 மருந்துகளில் 3 மட்டுமே உள்ளது. மருத்துவ கருவிகளுக்கும் பெரும் தட்டுப்பாடு உள்ளது. கண் அறுவை சிகிச்சைக்கு லென்ஸ்கள் பற்றாக்குறை. சமீப நாட்களாக ரத்தம் ஏற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.நோயாளிகள் நாளுக்கு நாள் இறக்கின்றனர்.எளிய மருந்துகள் கிடைக்காததால் ஏராளமான நோயாளிகள் இறக்கின்றனர்.தொற்றுநோய் இல்லாத அனைத்து நோயாளிகளும் ஆபத்தில் உள்ளனர்’ என்றார்.