இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.