Friday, January 17, 2025
24.3 C
Colombo
செய்திகள்உலகம்ஜோ பைடனுக்கு எதிராக விசாரணை

ஜோ பைடனுக்கு எதிராக விசாரணை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிராக விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவருக்கு சொந்தமான அலுவலகத்தில் இரகசிய ஆவணங்கள் சிக்கிய சம்பவம் தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு, பைடனுக்கு சொந்தமான அலுவலகத்தில் பல ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.

வெள்ளை மாளிகை மற்றும் பைடனின் வழக்கறிஞர்கள் கூட அதை உறுதிப்படுத்தினர்.

அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லண்டின் ஆலோசனையின் பேரில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைக்கு தலைமை தாங்குவதற்கு சுயாதீன சட்டத்தரணி ரொபர்ட் ஹெர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பைடனின் டெலவேர் இல்லத்தின் கேரேஜில் மேலும் பல இரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் இன்று (13) வெளிப்படுத்தியுள்ளன.

வீட்டில் ஓய்வெடுக்கும்போது, தனது பெரும்பாலான நேரத்தை பைடன் கேரேஜில் செலவிடுவார் என்று கூறப்படுகிறது.

ரகசிய ஆவணங்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று பைடன் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், அட்டர்னி ஜெனரலின் மேற்பார்வையின் கீழ் விசாரணைக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் பைடன் தெளிவுபடுத்தியுள்ளார்.

பைடென் ரகசிய ஆவணங்களை வைத்திருந்தது குறித்து உடனடியாக விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று போட்டி குடியரசுக் கட்சியினரும் கூறியுள்ளனர்.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles