சமைத்த இருபது மீன் துண்டுகள் உள்ளடங்கிய உணவுப் பொட்டலத்தை நாடாளுமன்றத்திற்கு வெளியே கொண்டு செல்ல முற்பட்டதாக உணவு மற்றும் பானங்கள் திணைக்களத்தின் ஊழியர் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஊழியருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபர் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற முற்பட்ட வேளை, அவரது பயணப் பொதிகள் பொலிஸ் அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே குறித்த உணவுப் பொதி கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பார்சலில் பால் போத்தல் மற்றும் இஞ்சியும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இருந்து உணவு மற்றும் ஏனைய பொருட்கள் வெளியே கொண்டு செல்லப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஏற்கனவே சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
எனினும்இ உணவுப் பொருட்கள் தொடர்ச்சியாக கொண்டு செல்லப்படுவதாக நாடாளுமன்ற ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைக்காலமாக உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவது அதிகரித்து வருவதாக அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினார்.