Saturday, December 20, 2025
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமெரிக்கா உட்பட 6 நாடுகளிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய அனுமதி

அமெரிக்கா உட்பட 6 நாடுகளிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய அனுமதி

இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் அந்த நாட்டிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி இல்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பறவை காய்ச்சல் இருப்பதால், அந்த நாடுகளில் இருந்து முட்டை இறக்குமதியை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க முடியாது என அவர் கூறினார்.

தேவைப்பட்டால் பறவைக் காய்ச்சல் இல்லாத அமெரிக்கா, பிரேசில், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை இல்லை என்றும் அவர் கூறினார்.

கண்ணூர்வாயில் உள்ள கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles