Monday, July 14, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டா விலகி ரணில் வந்தாலும் மனித உரிமை விடயத்தில் முன்னேற்றம் இல்லை!

கோட்டா விலகி ரணில் வந்தாலும் மனித உரிமை விடயத்தில் முன்னேற்றம் இல்லை!

மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று தனது 2023ஆம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டது.

2022ஆம் ஆண்டு இலங்கையில் ஜனாதிபதிகள் மாற்றப்பட்ட போதிலும், நாட்டின் மனித உரிமைகள் நிலைப்பாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பல ஆண்டுகளாக தவறான ஆட்சி, கடுமையான பொருளாதார நெருக்கடி, சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஊழல் போன்றவற்றால் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் வீதிக்கு வந்தனர்.

நீண்டகாலமாக பாரிய உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை மாதம் பதவி விலகினார்.

எவ்வாறாயினும், புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைதியான போராட்டங்களை பெருமளவில் நசுக்கியுள்ளார்இ செயற்பாட்டாளர்களை சிறையில் அடைத்துள்ளார் மற்றும் கடந்த கால மீறல்களுக்கான நீதிக்கான கோரிக்கைகளை புறக்கணித்துள்ளார்.

‘சீர்திருத்தம் மற்றும் பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடக்குமுறையுடன் பதிலளித்தார்’ என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்..

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles