Tuesday, July 15, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகனவு நனவாகாததால் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்

கனவு நனவாகாததால் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்

மாத்தறை – அக்குரஸ்ஸ பிரதேசத்தில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

தனது கனவு உலகத்தை நிர்மாணிப்பதற்கு பொருத்தமான வேலை கிடைக்கவில்லை என பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டு வேலைக்கான தனது கனவை நனவாக்க முயன்ற இளைஞனின் உடல் கூரையில் தொங்கிய நிலையில் அக்குரஸ்ஸ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

கசுன் அஞ்சன ஜயசிங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் சமீபகாலமாக எப்படியாவது வாழ்க்கையை வெற்றி பெற வேண்டும் என்று கொத்தனார் ஒருவரிடம் உதவிக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் கொரிய பரீட்சை எழுதியவர் 5 புள்ளிகளை இழந்ததால் மனமுடைந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குடும்பத்தில் மூத்த மகனான கசுன் அஞ்சன குடும்ப பாரத்தை சுமந்து கொண்டு தனது விருப்பத்திற்கு ஏற்ப பெற்றோரை நடத்த முடியாமல் தவித்து வந்ததாக தாய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles