அதிக வாடகை செலுத்தி தனியார் இடங்களில் இயங்கும் அனைத்து அரச அலுவலகங்களும் அரசாங்கத்திற்கு சொந்தமான இடங்களுக்கு மாற்றப்படும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்ன, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
மேலும், அனைத்து அரச நிறுவனங்களும் தண்ணீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் உரிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து அரச நிறுவனங்களிலும் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் தமது அன்றாட கடமைகளை அன்றைய தினத்தில் முடித்துக் கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு செய்கிறார்களா என்பதை பரிசோதிப்பதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஒவ்வொரு நிறுவனத்திலும் மின் விசிறிகள் மற்றும் குளிரூட்டிகளின் பயன்பாட்டைக் குறைக்கவும், விடுமுறை நாட்களில் கூடுதல் நேரத்துக்கு ஊழியர்களை பணியமர்த்துவது குறித்தும் கடிதம் அறிவுரை வழங்கியுள்ளது.