கடன் மறுசீரமைப்புக்கு உடனடியாக இணங்குமாறு சீனா மற்றும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
BBC ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் மத்திய வங்கியின் ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதியைப் பெறுவதற்கு உரிய உடன்படிக்கை அவசியமானது என மத்திய வங்கியின் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவும் இந்தியாவும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பது அனைத்து தரப்பினரின் நலன் கருதி அது அனைவருக்கும் நன்மை பயக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.