Saturday, July 19, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய நிதியமைச்சரை சந்தித்தார் செந்தில்

இந்திய நிதியமைச்சரை சந்தித்தார் செந்தில்

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கையின் பொருளாதார விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்த தருணத்தில் இந்தியா வழங்கிய உதவிகளுக்கு இதன்போது செந்தில் தொண்டமான் நன்றிகளை தெரிவித்தார்.

எதிர்கால ஏற்படப்போகும் பொருளாதார சவால்கள் மற்றும் அதனை எதிர்கொள்வது குறித்தும், தொடர்ந்தும் இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்க வேண்டும் எனவும் இதன் போது இந்திய நிதி அமைச்சரிடம் செந்தில் தொண்டமான் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடபட்டது.

இலங்கைக்கு இந்தியா அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனது முழுமையான உதவிகளை வழங்கும் எனவும் இந்தியா பங்களாதேஷிற்கு வழங்கிய முழுமையான உதவியால் இன்று பங்களாதேஷ் முன்னேற்றம் அடைந்து வருவது போல் இலங்கையும் முன்னேற்றமடைய வேண்டும் என இந்திய நிதி அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் மறைந்த தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் வரலாறு புத்தகத்தை இ.தொ.கா சார்பில் செந்தில் தொண்டமான் இந்திய நிதி அமைச்சருக்கு வழங்கி வைத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles