Monday, November 18, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனுஷ்கவுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

தனுஷ்கவுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கை அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது

பொலிஸார் மேலதிக ஆதாரங்களை திரட்டுவதற்காக தனுஷ்க குணதிலக்க மீதான பாலியல் வழக்கை சிட்னி ஒத்திவைத்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்காக அஸ்திரேலியா சென்றிருந்தபோதுஇ அரட்டை செயலியான டிண்டரில் அறிமுகமான பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நான்கு குற்றச்சாட்டுகள் தனுஷ்க குணதிலக்க மீது சுமத்தப்பட்டுள்ளன.

சிட்னியில் உள்ள ஒரு மதுபானசாலையில், அப்பெண்ணுடன் தனுஷ்க மது அருந்தியதாக பொலிஸ் கூறுகிறது.

அதன்பின்னர் சிட்னியின் கிழக்கு புறநகரில் உள்ள ரோஸ் பே விடுதிக்கு இருவரும் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அங்கு உடலுறவில் ஈடுபடும்போது தனுஷ் குணதிலக்க தன்னை மிகவும் வலுக்கட்டாயமாக கழுத்தை நெரித்ததாகவும், தான் உயிருக்கு பயந்ததாகவும், ஆணுறை அணியுமாறு அவரிடம் கூறிய போதிலும், அதனை தனுஷ்க மறுத்ததாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில்இ ஒத்திவைக்கப்பட்டிருந்த வழக்குஇ இன்று மீண்டும் சிட்னி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிவான் டேவிட் பிரைஸ், இந்த வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles