Friday, December 12, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிசக்தி துறை சீர்திருத்தங்கள்: அமெரிக்காவும், இலங்கையும் கலந்துரையாடல்

எரிசக்தி துறை சீர்திருத்தங்கள்: அமெரிக்காவும், இலங்கையும் கலந்துரையாடல்

எரிசக்தி துறை சீர்திருத்தங்கள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் தெற்காசியாவிற்கான சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்.எம்.எலீன் லௌபச்சர், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர் இன்று காலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகரவை சந்தித்தனர்.

எரிசக்தி துறை சீர்திருத்தங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தற்போதைய சவால்கள் மற்றும் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் குறித்த அரசாங்க திட்டங்கள் குறித்து இரு பிரிவினரும் கலந்துரையாடியுள்ளனர்.

குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நிலையான ஆற்றல் வழங்கல் பொருளாதார மீட்சிக்கு முக்கியமானது என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எரிசக்தி மற்றும் காலநிலை இலக்குகளை எவ்வாறு நிவர்த்தி செய்ய முடியும் என்பது தொடர்பில், புதுப்பிக்கத்தக்க வளங்களின் அபிவிருத்திக்கான தற்போதைய பங்காளித்துவங்கள் மற்றும் ஆதரவு தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles