Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

எம்பிலிபிட்டிய – பனாமுர – ஓமல்பே பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் தமது பிள்ளையை பாடசாலையில் இறக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீதியில் மறைந்திருந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஓமல்பே பகுதியில் வசித்துவந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles