இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முக்கியமான ஸ்போர்ட்மென்சிப் சம்பவம் ஒன்று பதிவாகி இருந்தது.
இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க 98 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, பந்துவீச்சாளர் பக்கம் நின்றிருந்த அவர், எல்லைக்கோட்டுக்கு வெளியே இருந்தார்.
இதன்போது மொஹமட் சமி அவரை ரன்னவுட் முறையில் ஆட்டமிழக்க செய்தாலும், அந்த ஆட்டமிழப்பை கைவிடுவதற்கு ரோஹித் ஷர்மா தீர்மானித்தார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஷர்மா, தசுன் ஷானக்க சிறப்பாக துடுப்பாடிக் கொண்டிருந்த போது, அவர் இந்தமுறையில் ஆட்டமிழக்கச் செய்யப்படக்கூடாது என்று தாம் கருதியாதாக கூறியுள்ளார்.
இதனை பெரிதும் பாராட்டியுள்ள இலங்கையின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய, ஷர்மாவின் இந்த குணத்துக்காக தலைவணங்குவதாக தெரிவித்துள்ளார்.