எதிர்வரும் வார இறுதி நாட்களில் ரயில் சேவை பாதிக்கப்படும் அபாயமிருப்பதாக துறைசார் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு காரணங்களை முன்வைத்து எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ரயில் சேவை பணியாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இதனால் பல ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படும் நிலைமை இருப்பதாக ரயில் பணியாளர்கள் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.