பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவினால் வாடகைக்கு கொடுக்கப்பட்ட காணியில் நபர் ஒருவர் கஞ்சா பயிரிட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை இதனை தெரிவித்துள்ளது.
சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதி சபாநாயகருக்கு சொந்தமானது என கூறப்படும் மத்தளஇ பெப்பர்கமத்த பிரதேசத்தில் அமைந்துள்ள 50 ஏக்கர் காணியில் சுமார் 10 ஏக்கர் நிலம்இ சந்தேகநபருக்குகாய்கறிகள் மற்றும் பழங்களை வளர்ப்பதற்காக வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட சுமார் இரண்டரை ஏக்கர் காணியில் கஞ்சா பயிரிட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கஞ்சா ஐந்து அடி உயரத்திற்கு வளர்ந்துள்ளதாக கிடைத்த புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கதிர்காமம் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் குழுவொன்று இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.
சந்தேகநபரை சாட்சியமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் சில கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டதுடன், எஞ்சியிருந்த கஞ்சா செடிகள் எரித்து அழிக்கப்பட்டுள்ளன.
#Lankadeepa