எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் கப்பலுக்கு சொந்தமான காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து அமெரிக்க டொலர்களில் இழப்பீடு பெறுவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சபையில் சமர்ப்பித்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடற்கரையை சுத்தப்படுத்துதல்இ கழிவு முகாமைத்துவம்இ சுற்றாடல் சேதம் போன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்க டொலர்களில் இழப்பீடு பெற அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதுதவிர, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்து ஏற்பட்டால், கடற்கரையை சுத்தம் செய்தல், கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்க டொலரில் இழப்பீடு பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காப்புறுதி கோரிக்கைகளின் முழுப் பகுதியையும் ரூபாவில் பெற்றுக் கொள்வதன் மூலம் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியை கப்பலின் உரிமையாளரான காப்புறுதி நிறுவனம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் எனவும் அமைச்சர் அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இழப்பீட்டுத் தொகையை ரூபாவாகப் பெறுவதற்குப் பதிலாக அமெரிக்க டொலர்களில் பெறுவதே பொருத்தமானது என கடல் சுற்றாடல் அதிகாரசபை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக உரிய அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.