Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உலகம்மெட்ரோ பணியின்போது சரிந்த தூண் - பைக்கில் சென்ற தாய், மகன் பலி!

மெட்ரோ பணியின்போது சரிந்த தூண் – பைக்கில் சென்ற தாய், மகன் பலி!

பெங்களூரில் மெட்ரோ பணியின்போது இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்த தூண் சரிந்து விழுந்ததில் சாலையில் மோட்டாள் சைக்கிளில் சென்ற தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெங்களூர் – நாகவரா பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடந்து வரும் நிலையில், கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலத்துக்காக தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

நாகவரா பகுதியில் இன்று காலை 11 மணி அளவில் மெட்ரோ ரயில் பாதைக்கான தூண் ஒன்று இடிந்து சாலையில் சென்றவர்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த சென்ற கணவர், மனைவி மற்றும் அவர்களது 2 குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தாய் மற்றும் 2 வயது மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

#NDTV

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles