தாய்வான் நாட்டைச் சேர்ந்த Evergreen Marine நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 52 மாதச் சம்பளத்தை போனஸாக வழங்கியுள்ளது.
கப்பல் போக்குவரத்து நிறுவனமான Evergreen Marine, அதன் ஊழியர்களுக்கு ஆண்டு இறுதி போனஸை அறிவித்துள்ளது.
2022 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் Evergreen Marine நிறுவனத்தின் இலாபம் மட்டும் ஒரு இலட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபா என கருதப்படுகிறது.
இந்நிலையில், ஊழியர்களுக்கு 10 முதல் 45 மாதம் வரையிலான சம்பளத் தொகை போனஸாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகச் சிறப்பாக வேலை செய்த ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 52 மாதம் வரையிலான சம்பளத்தை போனஸாக வழங்கியுள்ளது.
இதன்மூலம், இந்நிறுவனத்தில் ஓராண்டு வேலை செய்த ஊழியர் நான்காண்டுகளுக்கான ஊதியத்தை போனஸாக பெறுவார்.
ஜூனியர் லெவல் ஊழியருக்கான அடிப்படை சம்பளம் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாவாக இருக்கும் நிலையில், அவர் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தால் சுமார் 60 இலட்சம் ரூபா வரை போனாஸாக கிடைக்கும்.
#NDTV